தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணன், நேற்று நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். அவர் வரும் வெள்ளிக்கிழமை அன்று துணை குடியரசுத் தலைவராகப் பதவியேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை நாடாளுமன்ற அதிகாரிகள் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அதன் பிறகு, அவர் அரசியல் சட்டத்தின் மீதான காப்புறுதி உறுதிமொழியையும் செய்து கொள்வார்.
மேலும், துணை குடியரசுத் தலைவருக்காக நாடாளுமன்றத்தில் பிரத்தியேக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. பதவியேற்ற உடன், அந்த அறையில் தனது பொறுப்புகளை அவர் ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.