படிக்கட்டுகளில் ஏறி இறங்க சிரமப்படும் உசேன் போல்ட். உலக சாதனை படைத்தவருக்கு இப்படி ஒரு நிலையா?

Siva

வியாழன், 18 செப்டம்பர் 2025 (16:52 IST)
ஒலிம்பிக் தடகள போட்டிகளில் மின்னல் வேக மனிதன் என்று அழைக்கப்பட்ட உசேன் போல்ட், தான் செய்த சாதனைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 100 மீட்டர் ஓட்டத்தில் 9.58 விநாடிகளில் இலக்கை அடைந்து சாதனை படைத்த இவர், ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் எட்டு தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.
 
சமீபத்தில் அளித்த பேட்டியில், விளையாட்டு வாழ்க்கைக்கு பிறகு தனது உடல்நிலை குறித்து அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். "இளமையாக இருந்தபோது வேகமாக ஓடுவது எனக்கு பிரச்சினையாக தெரியவில்லை. ஆனால் இப்போது படிக்கட்டுகளைக்கூட ஏறி இறங்குவது சிரமமாக உள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.
 
2017-ஆம் ஆண்டு விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனது வாழ்க்கை முறை முழுவதுமாக மாறிவிட்டதாகவும், அதுவே இந்த உடல்நல குறைபாட்டுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் உசேன் போல்ட் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்