ஆசியக் கோப்பை தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் முடிந்து சூப்பர் நான்கு சுற்றுகள் தொடங்கவுள்ளன. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றான இந்தியா- பாகிஸ்தான் போட்டி சில தினங்களுக்கு முன்னர் பரபரப்பில்லாமல் ஒருதலைபட்சமாக முடிந்தது. ஆனால் போட்டியில் நடந்த இன்னொரு சம்பவம்தான் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இந்த போட்டி முடிந்ததும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்தியக் கேப்டன் கபில்தேவ் “பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை. கைகுலுக்குவதோ அல்லது கட்டிப்பிடிப்பதோ அவரவரின் தனிப்பட்ட விருப்பம். இந்திய அணி கடந்த 20 ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணியின் கிரிக்கெட் என்பது சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.” எனக் கூறியுள்ளார்.