அசுரப் பாய்ச்சலில் ருத்துராஜ் கெய்க்வாட்… தரவரிசையில் நம்பர் 10க்குள் எண்ட்ரி!

Webdunia
புதன், 6 டிசம்பர் 2023 (07:11 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ருத்துராஜ் கெய்க்வாட், நீண்டகாலமாக இந்திய அணியில் இடத்துக்காக போராடி வந்தார். இந்நிலையில் இப்போது அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரில் இடம்பெற்று அந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக திகழ்ந்தார்.

அதையடுத்து தென்னாப்பிரிக்கா தொடரில் அவருக்கு மூன்று வடிவிலான போட்டிகளிலும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடிய ருத்துராஜ் இப்போது டி 20 போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளார்.

63 ஆவது இடத்தில் இருந்த அவர் இப்போது ஒரே தொடரில் 7 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதன் முதலாக ருத்துராஜ் டாப் 10 இடங்களுக்குள் வந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்