ஐபிஎல்-2023; ருதுராஜ், கான்வே அதிரடி ஆட்டம்...குஜராத் அணிக்கு வெற்றி இலக்கு இதுதான்

Webdunia
செவ்வாய், 23 மே 2023 (21:52 IST)
சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குவாலிஃபயர் 1 போட்டி நடைபற்று வரும் நிலையில், குஜராத் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, சென்னை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், ருதுராஜ் 60ரன்னும்,  கான்வே 40ரன்னும், ரஹானே 17 ரன்னும், ஜடேஜா22 ரன்னும் அடித்தனர். 20  ஓவர்கள் முடிவில், அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து, குஜராத் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தற்போது பேட்டிங் செய்து வரும் குஜராத் அணியில், ஷா 12 ரன்னும், கில்10 மற்றும் பாண்டியா 4 ரன்னுடன் விளையாடி வருகின்றனர்.3.3. ஓவர்கள் முடிவில்  1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களுடன் விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்