மும்பையில் எனது ரெக்கார்ட் பற்றி நான் யோசிக்கவில்லை.. கேப்டன் ரோஹித் ஷர்மா!

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (07:47 IST)
இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் லீக் போட்டிகளில் 9 போட்டிகளிலும் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் இன்று நான்காவது இடத்தில் உள்ள நியுசிலாந்து அணியை முதல் அரையிறுதி போட்டியில் எதிர்கொள்கிறது.

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நியுசிலாந்துக்கு எதிராக அரையிறுதி போட்டியில் தோற்று வெளியேறியது என்பதால் இந்த முறை அதற்குப் பதிலடி கொடுக்க இந்திய அணி தயாராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று போட்டி நடக்கும் மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு மோசமான புள்ளிவிவரங்களே இதுவரை பதிவாகியுள்ளன. அதுபற்றி பேசியுள்ள அவர் “நன் என்னுடைய ரெக்கார்டைப் பற்றி யோசிக்கவில்லை. கடந்த முறை உலகக் கோப்பையில் விளையாடிய அணியை விட இந்த அணி ஆதிக்கம் செலுத்தும் அணியா என்பது குறித்து பேச விரும்பவில்லை.  என்னைப் பொறுத்தவரை அனைத்து உலகக் கோப்பை அணிகளும் ஆதிக்கம் செலுத்தும் அணியாகதான் இருந்தது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்