இந்த தொடர்தான் கேப்டனாக ரோஹித் ஷர்மாவின் கடைசித் தொடராக இருக்கும் என்றெல்லாம் தகவல்கள் பரவின. தற்போது 37 வயதாகும் அவர் எப்படியும் அடுத்து வரும் 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட மாட்டார். அதனால் இப்போதிருந்தே புதியக் கேப்டனை தயார்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போதைக்கு தான் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெறப் போவதில்லை என்று அறிவித்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி ரோஹித் ஷர்மாவுக்கு ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். அதில் ”ரோஹித் ஷர்மா வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறந்த கேப்டனாக செயல்படுகிறார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக செயல்படவில்லை. விரைவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் வருகிறது. அது மிகவும் கடினமாக இருக்கும். ஸ்விங்குக்கு ஏற்றதாக இந்த ஆடுகளங்கள் இருக்கும். அதை சமாளிக்க அவர் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.