சங்ககராவும் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறுகிறாரா?.. KKR – புதிய பொறுப்பு!

vinoth

ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2025 (06:49 IST)
ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட போது முதல் சீசனில் கோப்பையை வென்ற அணி ராஜஸ்தான் ராயல்ஸ். ஆனால் அதன் பிறகு 17 ஆண்டுகளாக அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மோசமான வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப்க்குத் தகுதி பெறாத அணியாக பின்னடைவை சந்தித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இந்நிலையில் அந்த அணிக் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கும் நிர்வாகத்துக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் விரைவில் நடக்க இருக்கும் மினி ஏலத்துக்கு முன்பாக தன்னை வேறு அணிகளுக்கு டிரேட் செய்யவோ அல்லது ஏலத்தில் விட்டுவிடவோ சொல்லிக் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அந்த அணியின் இயக்குனராக இருக்கும் குமார் சங்ககராவும் தற்போது தனது பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தலைமைப் பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் ஆகியவற்றில் ஒரு பொறுப்பில் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சஞ்சு சாம்சனையும் வாங்க கொல்க்த்தா அணி ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்