இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் ஹிட் மேன் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ரோஹித் சர்மா. விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா, மும்பை அணிக்கும் கேப்டனாக இருக்கிறார்.
1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி மகாராஷ்டிராவில் பிறந்த இவர், கடந்த 2007 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கான அறிமுகம் ஆனார். திறமையான விளையாடிய ரோஹித் அதே ஆண்டில் டி-20 உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்தார். 2013 ஆம் ஆண்டு மினி உலக கோப்பையை வென்ற இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்தார். இவர் , இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 267 ரன் கள் அடித்து, அதிக ரன் கள் அடித்த வீரர்கள் வீரர்களில் முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும், இவர் 2 இரட்டை சதங்கள் அடித்துள்ளார். இவருக்கு ரசிகர்களும், சக கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.