அப்பாவைப் பற்றி உருக்கமான பதிவைப் பகிர்ந்த ரிஷப் பண்ட்… ரசிகர்கள் ஆறுதல்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (18:33 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரராக உருவாகி வருகிறார் இளம் வீரரான ரிஷப் பண்ட். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 என அனைத்து விதமான போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இப்போது ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டனாகவும் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மறைந்த அவரின் தந்தையைப் பற்றி உருக்கமான ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘மிஸ் யு அப்பா. என் அப்பா, நான் என்னவாக ஆக விரும்பினேனோ அதற்காகவும் என்னை ஆதரித்து அன்பைப் பொழிந்தவர். தந்தைகளின் வலிமை குழந்தைகளுக்குப் பாதுகாப்புணர்வைக் கொடுக்கிறது. நீங்கள் இப்போதும் சொர்க்கத்தில் இருந்து என்னை பாதுகாப்பீர்கள் என்று தெரியும். என்னுடைய அப்பாவாக இருந்ததற்கு நன்றி. நான் எப்பொழுதும் உங்களை மிஸ் செய்துகொண்டு இருப்பேன். நாம் மீண்டும் சந்திக்கும் வரை அப்பா’ எனக் கூறியுள்ளார். இந்த பதிவில் ரசிகர்கள் அவருக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்