முதலில் நிதானமாக ஆடிய நியுசிலாந்து அணி இந்திய சுழல்பந்து வீச்சாளர்களான அக்ஸர் படேல் மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோரின் சுழல் தாக்குதலால நிலைகுலைந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜடேஜா ஐந்து விக்கெட்களும், அக்ஸர் படேல் நான்கு விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர்.
இதையடுத்து முதல் நாள் ஆட்டமுடிவின் போது இந்திய அணி 80 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதையடுத்து இரண்டாம் நாளில் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக ஆடிய பண்ட் 59 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். ஷுப்மன் கில் 70 ரன்களோடு களத்தில் உள்ளார். இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 195 ரன்கள் சேர்த்துள்ளது.