ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது.
இந்த போட்டியில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற பாஃப் டு பிளசிஸ் முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளார். பெங்களூர் அணி இந்த சீசனில் முதலில் பேட் செய்த இரண்டு போட்டிகளிலும் தோற்றுள்ளது. அதனால் இரண்டாவது பேட் செய்து சேஸ் செய்ய முடிவு செய்துள்ளது. லக்னோ அணியில் காயம் காரணமாக இம்பேக்ட் ப்ளேயராக விளையாடிய கே எல் ராகுல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
ஆர் சி பி அணி விவரம்
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(c), கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத்(w), ரீஸ் டாப்லி, மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்