மீண்டும் சொதப்பிய ஷுப்மன் கில்… கமெண்ட்ரியில் எச்சரித்த ரவி சாஸ்திரி!

vinoth
சனி, 3 பிப்ரவரி 2024 (08:07 IST)
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக கடந்த வருடத்தின் பெரும்பாலான நாட்கள் இடம்பிடித்திருந்தார்.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இன்னும் தன்னை நிரூபித்துக் கொள்ளவில்லை. தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரிலும் சொதப்பி வருகிறார். இதனால் அவர் மேல் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே கூட கில் புஜாரா கூட அனுபவிக்காத சலுகைகளை அனுபவித்து வருகிறார் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று நடந்த விசாகப்பட்டணம் டெஸ்ட் போட்டியிலும் அவர் 34 ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பினார். அப்போது கமெண்ட்ரி செய்துகொண்டிருந்த ரவி சாஸ்திரி “புஜாரா உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். அதனால் அவர் தேர்வுக்குழுவின் ரேடாரில் இருப்பார். அதே போல சர்பராஸ் கானும் தனது வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதனால் கில் தன்னுடைய இடத்தைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்” என எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்