ரிஷப் பண்ட்டை அப்படி பார்த்த போது கண்கலங்கி விட்டேன்… முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

vinoth

செவ்வாய், 11 ஜூன் 2024 (07:23 IST)
கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகியுள்ள ஐபிஎல் தொடரில் களமிறங்கி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்தினார்.

இதையடுத்து இப்போது உலகக் கோப்பை தொடரில் தேர்வான அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் நேற்று முன்தினம் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த 41 ரன்கள் மிக முக்கியமானவையாக அமைந்தது. அதே போல அவர் கீப்பிங்கிலும் கலக்கினார்.

இந்நிலையில் விபத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “பண்ட்டின் விபத்தைப் பற்றி கேள்வி பட்ட போது எனக்குக் கண்கள் கலங்கி விட்டன. அவரை மருத்துவமனையில் பார்த்தபோது நிலைமை இன்னும் மோசமாக வந்தது.  அந்த நிலையில் இருந்து மீண்டு வந்து அவர் ஒரு முக்கியமானப் போட்டியில் இவ்வளவு சிறப்பாக விளையாடுவது சாதாரண விஷயம் இல்லை. அவரின் இந்த பயணம் பல லட்சம் மக்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது” எனக் கூறி பாராட்டியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்