சஞ்சு சாம்சனுக்கும் எனக்கும் இடையில் பிரச்சனையா?... ரிஷப் பண்ட் ஓபன் டாக்!

vinoth

சனி, 8 ஜூன் 2024 (08:21 IST)
கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகியுள்ள ஐபிஎல் தொடரில் களமிறங்கி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்தினார்.

இதையடுத்து இப்போது உலகக் கோப்பை தொடரில் தேர்வாகியுள்ள அவர் பயிற்சி ஆட்டத்திலும் முதல் போட்டியிலும் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அணியில் அவரது பேட்டிங் வரிசையும் மாற்றப்பட்டுள்ளது. அணியில் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் இருந்தாலும் அவருக்கு ரிஷப் பண்ட் இருப்பதால் வாய்ப்பு வழங்க முடியவில்லை. இதனால் சஞ்சு சாம்சனையும் ரிஷப் பண்ட்டையும் ஒப்பிட்டு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருகின்றன.

இது குறித்து பேசியுள்ள ரிஷப் பண்ட் ”எனக்கும் ரிஷப் பண்ட்டுக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. சஞ்சு எப்போதும் அமைதியான மனநிலையில் இருப்பவர். எங்களைப் பற்றி பேசும் விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. நாங்கள் ஒரே அணியில் இருக்கும் வீரர்கள். எங்களுக்கு இடையே நல்ல புரிதலும், மரியாதையும் உள்ளது” எனக் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்