“ஷிவம் துபே இந்திய அணிக்குத் தேவையில்லை… ஏன் என்றால்?” – முன்னாள் வீரரின் கருத்து!

vinoth

சனி, 8 ஜூன் 2024 (15:37 IST)
இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடிக்க கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறார சஞ்சு சாம்சன். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமையேற்று வழிநடத்தும் சஞ்சு, இப்போதுதான் இப்போது டி 20 உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஆனால் அவருக்கு ப்ளேயிங் லெவனில் இடமளிக்கப்படவில்லை. கோலி, ரோஹித், பண்ட், சூர்யகுமார் என வலுவான முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் இருக்கும் நிலையில் சஞ்சு சாம்சன் ஐந்தாவது இடத்தில்தான் இறக்கப்படலாம். ஆனால் அந்த இடத்தில் ஹர்திக் பாண்ட்யா இருப்பதால் அவருக்கு இந்த தொடரில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல் போட்டியில் ஷிவம் துபேவுக்கும் இடம் கிடைக்கவில்லை. ஆனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் அக்ஸர் படேலுக்கு பதில் அவர் ஆடவைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர், “ஷிவம் துபே பந்துவீசப் போவதில்லை என்றால் அவருக்கு பதில் சஞ்சு சாம்சனை அணியில் எடுக்கலாம். ஒரு பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்கு கொடுப்பார்” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்