குடும்பத்தை வெளிநாட்டுக்கு அழைத்து வர முடியாமல் தவிக்கும் ரஷீத்கான்!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (15:50 IST)
ஆப்கன் அணியின் கேப்டன் ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் அரசியல் மாற்றங்களால் வருத்தத்தில் உள்ளார்.

ஆப்கனில் முகாமிட்டு இருந்த அமெரிக்கப் படைகள் நாடு திரும்பியதை அடுத்து தலிபான்களின் தாக்குதல் இப்போது ஆப்கானை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. உலகமே உற்றுப்பார்க்கும் ஒரு அரசியல் மாற்றமாக தாலிபான்களை கைப்பற்றுதல் உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தில் விளையாடி வரும் ரஷீத் கான் தனது குடும்பத்தைப் பற்றி வருத்தத்தில் உள்ளதாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். அதுபற்றி பீட்டர்சன் ‘நான் ரஷீத்கானோடு நீண்ட நேரம் இதுபற்றி பேசினேன். அங்கிருக்கும் தனது குடும்பத்தை வெளிநாட்டுக்குக் கொண்டுவர முடியவில்லையே என்று அவர் வருத்தத்தில் உள்ளார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்