நேற்று நடந்த டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில், டெல்லி வெற்றி பெற்றுள்ளது. இதை அடுத்து, பஞ்சாப் அணிக்கு புள்ளி பட்டியலில் முதலிடம் கிடைக்காமல் இரண்டாவது இடம் மட்டுமே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில், பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து, 207 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாட்டு நிலையில் 19.3 ஓவரில் 208 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.
இதனை அடுத்து, டெல்லி அணி புள்ளி பட்டியலில் 15 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. இன்னும் ஒரே ஒரு வெற்றியை பெற்றிருந்தால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்றைய தோல்வி காரணமாக 17 புள்ளிகள் உடன் பஞ்சாப் அணி இரண்டாம் இடத்தில் உள்ளது என்பதும், குஜராத் 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெங்களூர் மற்றும் மும்பை ஆகிய அணிகள் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன.
ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில், இன்னும் நான்கு லீக் போட்டிகள் மட்டுமே உள்ளன என்பதும், அதன் பின்னர் குவாலிபயர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகளும், இறுதிப் போட்டிகள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.