இந்திய அணிக்காக 15 ஆண்டுகளுக்கும் மேல் விளையாடிய ராகுல் டிராவிட் எந்தவொரு கோப்பையையும் வெல்லாமல் ஓய்வு பெற்றார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணிக்காக தன்னுடைய பங்களிப்பை அவர் கொடுத்துக் கொண்டுதானிருந்தார். இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளராக இருந்து அந்த அணியைக் கோப்பை வெல்லவைத்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த கர்நாடக லீக் போட்டிகளின் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது அவர் ராஜஸ்தான் அணியோடு இணைந்துள்ளார். சக்கர நாற்காலியில் மைதானத்துக்குள் வந்து அவர், வீரர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.