நீண்ட இடைவெளிக்கு பின் பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva

புதன், 26 மார்ச் 2025 (09:57 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த ஏழு நாட்களாக தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டிருந்த நிலையில், இன்று திடீரென சரிந்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இன்றைய சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நிலவரங்களை பார்ப்போம்.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதல் லேசான சரிவுடன் வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது.  சற்று முன்பு 83 புள்ளிகள் குறைந்து 77,937 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டது.
 
அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 6 புள்ளிகள் குறைந்து 23,062 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் டைட்டான், டிசிஎஸ், டாட்டா மோட்டார்ஸ்,  மகேந்திரா அண்ட் மகேந்திரா,  இண்டஸ் இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், விப்ரோ, டெக் மகேந்திரா, டாட்டா ஸ்டீல், சன் பார்மா, ஸ்ரீராம் பைனான்ஸ், ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ், மாருதி, கோடக் மகேந்திரா வங்கி, ஐடிசி, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்