ராபின்வுட் என்ற தெலுங்கு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள டேவிட் வார்னர், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக இந்தியா வர விமானத்தில் பயணம் செய்ய காத்திருந்தார். ஏர் இந்தியா விமானத்தில் அவர் இருக்கை ஒதுக்கி இருந்த நிலையில், விமானி இல்லாததால் பல மணி நேரம் கிளம்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டேவிட் வார்னர், தனது சமூக வலைதளத்தில் இது குறித்து பதிவு செய்திருந்தார். "விமானத்தை இயக்க விமானி இல்லை என தெரிந்தும் ஏன் பயணிகளை உள்ளே ஏற அனுமதித்து உள்ளீர்கள்?" எனக் காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஏர் இந்தியா, "மோசமான வானிலை காரணமாகத்தான் விமானம் தாமதமாக புறப்பட்டதாக" விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், வார்னரின் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.