பேட்டிங்கில் அதிரடி காட்டாத ஐதராபாத்.. ராஜஸ்தானுக்கு எளிய இலக்கு..!

Siva

வெள்ளி, 24 மே 2024 (21:58 IST)
நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி அதிரடியாக பேட்டிங் செய்த நிலையில் இன்றைய முக்கியமான போட்டியில் அதிரடி எடுபடாமல் போனதால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் கடை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி ஆரம்பத்திலேயே சீரான வரிசையில் விக்கெட்டுகளை இழந்தது. க்ளாசன் மட்டும் ஓரளவு நிலைத்து விளையாடி 50 ரன்கள் அடித்தார்.
 
இதனை அடுத்து 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே ஐதராபாத் எடுத்துள்ளது. இந்த நிலையில் 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி தற்போது விளையாடி வரும் நிலையில் நான்கு ஓவர்களில் 24 ரன்கள் எடுத்துள்ளது.
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணிதான் கொல்கத்தா அணிவுடன் இறுதி போட்டியில் மோதும் அணி என்பதால் இன்றைய போட்டியில் வெல்ல இரு அணிகளும் தீவிரமாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்