இந்த தொடரில் செப்டம்பர் 14 ஆம் தேதி நடந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் வென்ற பிறகு இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தன்னுடைய சமூகவலைதளப் பதிவில் “இந்த வெற்றியை பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நமது ராணுவத்தினருக்கும் சமர்ப்பிக்கிறோம்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் அவரின் இந்த பதிவு விளையாட்டின் நற்பெயருக்குத் தீங்கு விளைவிப்பதாக உள்ளதாகவும், அவரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் அளித்தது. இந்த புகாரை ஐசிசி ஏற்றுக்கொண்டு முறையான விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.