வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு… தேவ்தத் & ஜெகதீசனுக்கு வாய்ப்பு!

vinoth

வியாழன், 25 செப்டம்பர் 2025 (13:25 IST)
இந்திய அணி தற்போது ஆசியக் கோப்பைத் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான அணியில் ரிஷப் பண்ட் காயம் காரணமாக இடம்பெற மாட்டார் என தகவல் வெளியானது. அதே போல இங்கிலாந்து தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு சொதப்பிய கருண் நாயருக்கும் வாய்ப்பளிக்கப்படாது என சொல்லப்பட்டது. வெளியான தகவல்கள் அனைத்தும் உண்மை என்பதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக தற்போது அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி
ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே எல் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரெல்,  ரவீந்தர ஜடேஜா (துணைக் கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஜாஸ்ப்ரீத் பும்ரா, அக்ஸர் படேல், நிதீஷ்குமார் ரெட்டி, ஜெகதீசன், மொகம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்