ஆசிய கோப்பை: வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இந்திய அணி.. இறுதிப்போட்டிக்கு தகுதி..!

Siva

வியாழன், 25 செப்டம்பர் 2025 (08:08 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையிலான போட்டியில், வங்கதேச அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றது.
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா, மீண்டும் ஒரு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 37 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். இதில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் அடங்கும். 
 
இதனை தொடர்ந்து, 169 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி, தொடக்க ஆட்டக்காரர் சயிப் ஹசன் 69 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தபோதிலும், பின்வந்த பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இதனால், 19.3 ஓவர்களில் வங்கதேச அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம், இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. இந்தியாவின் வெற்றியால் இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
 
வரும் போட்டிகளில், நாளை பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தும். ஒருவேளை, வங்கதேச அணி வெற்றி பெற்றால், அதிக ரன்ரேட் அடிப்படையில் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற முயற்சிக்கும்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்