அறிமுக டெஸ்ட் தொடரிலேயே அதிரடி.. சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி!

Prasanth Karthick
சனி, 28 டிசம்பர் 2024 (12:27 IST)

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

 

 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகள் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. ஒரு போட்டி ட்ரா செய்யப்பட்டது.

 

இந்நிலையில் 4வது டெஸ்ட் போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 474 ரன்களை குவித்திருந்தது. இந்நிலையில் தற்போது களமிறங்கி விளையாடி வரும் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தாலும் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவின் இலக்கை நெருங்க முயற்சிகளை மேற்கொண்டது.
 

ALSO READ: முட்டாள்தனமான ஷாட்.. ரிஷப் பண்ட்டை கடுமையாக சாடிய சுனில் கவாஸ்கர்!

 

இந்த தொடரின் மூலமாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகியுள்ள இந்திய இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி, தனது நான்காவது டெஸ்ட் போட்டியில் 176 பந்துகளில் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸ் என விளாசி மொத்தம் 105 ரன்களை பெற்று அவுட் ஆகாமல் தொடர்ந்து வருகிறார். டெஸ்ட் போட்டியில் அறிமுக தொடரிலேயே சதம் அடித்த சாதனை வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் நிதிஷ்குமார் ரெட்டி. மழையால் ஆட்டம் தாமதமாகி வரும் நிலையில் தற்போது இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்கள் என்ற நிலையில் உள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்