இதுதான் உங்க கடைசி ஐபிஎல் சீசனா? – ஓப்பனாக பதில் சொன்ன தோனி!

Webdunia
புதன், 3 மே 2023 (16:45 IST)
இந்த ஐபிஎல் சீசனோடு சிஎஸ்கே கேப்டன் தோனி ஓய்வு பெற உள்ளதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் அவரே அதுகுறித்து ஓப்பனாக பேசியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் வந்தாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மட்டுமல்ல மற்ற அணி ரசிகர்களுமே தோனியின் சிக்ஸர்களை காண குவிந்து விடுவர். இந்திய அணி ஜாம்பவான் வீரரான தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவதால் அப்படி ஒரு மவுசு.

தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி விரைவில் ஓய்வு பெற உள்ளதாக பேசிக் கொள்ளப்பட்டது. ஒவ்வொரு சீசனிலும் அப்படி சொல்லப்பட்டாலும் கூட இதுவரை தோனி அவராக அவரது ஓய்வு குறித்து பேசவில்லை. ஆனால் இந்த ஐபிஎல்லில் ஆரம்பம் முதலே ஓய்வு பெறப் போவது போல சில இடங்களில் மறைமுகமாக அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் இன்றைய போட்டி தொடங்கும் முன்னர் தோனியிடம் கேள்வி எழுப்பியபோது தொகுப்பாளர் டேனி மோரிசன் “இது உங்கள் கடைசி ஐபிஎல்.. ரசிகர்களின் ஆதரவால் மகிழ்ச்சி அடைகிறீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு கூலாக பதில் சொன்ன கூல் கேப்டன் “இதுதான் என் கடைசி ஐபிஎல் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள். நான் இன்னும் முடிவு செய்யவில்லை” என்று கூறியுள்ளார். தோனியின் இந்த பதில் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்