ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் பேட் அளவை அளக்கும் நடுவர்கள்… காரணமென்ன?

vinoth

செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (17:04 IST)
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஒரு புதிய விதியை பிசிசிஐ அமல்படுத்தியுள்ளது. இனிவரும் போட்டிகளில் அனைத்து பேட்ஸ்மேன்களும், தங்கள் பேட்டை சோதனைக்கு உட்படுத்தி அதன் பின்னரே களமிறங்க முடியும்.

இந்த தொடருக்கு சில முறை ஃபில் சால்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் பேட்களை நான்காம் நடுவர் சோதனை செய்தார். இந்நிலையில் இனிமேல் எல்லா பேட்ஸ்மேன்களும் இந்த சோதனைக்கு உள்ளாக்கபட உள்ளனர். இதற்கு முன்பாக இந்த சோதனை வீரர்கள் அறையில் நடந்த நிலையில் வெளிப்படைத் தன்மைக்காக களத்திலேயே இப்போது சோதனை நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு வீரரின் பேட்டும் பின்வரும் அளவை மீறக்கூடாது: அகலம்: 4.25 அங்குலம் / 10.8 செ.மீ, அடர்த்தி? 2.64 அங்குலம் / 6.7 செ.மீ, ஓரத்தின் அளவு: 1.56 அங்குலம் / 4.0 செ.மீ. இந்த அளவுகளோடு நடுவர் வைத்திருக்கும் அளவுகோள் உள்ளே பேட் செல்லும் வகையில் இருக்கவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்