அதிக டக் அவுட்: சச்சினை பின்னுக்குத் தள்ளிய விராட் கோலி!

Sinoj
புதன், 17 ஜனவரி 2024 (21:02 IST)
இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான  3 வது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்து வரும்  இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங் தேர்வு செய்தார்.

எனவே முதலில் பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் 4 ரன், விராட் கோலி டக் அவுட், சிவம் டுபே 1 ரன், சஞ்சு சாம்சன் 0 ரன்னுடன் அவுட்டாகினர்.

துவக்க வீரர்கள் 4 பேரை இழந்து தொடக்கத்தில் இந்தியா திணறிய நிலையில், ரோஹித் சர்மா, ரித்து சிங் சிறப்பாக விளையாடி4 விக்கெட் இழப்பிற்கு  212 ரன்கள் குவித்தனர்.

இன்றைய போட்டியில் விராட் கோலி 6 ரன்கள் அடிப்பதன் மூலம் புதிய சாதனை படைக்கலாம் என கூறப்பட்டது.

6 ரன்கள் விராட் கோலி அடித்தால், டி-20 கிரிக்கெட்டில் உலக அளவில் 12,000 ரன்கள் அடித்த  4 வது வீரர் மற்றும் இந்திய அளவில் முதல் வீரர் என்ற சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்றைய போட்டியில் கோல்டன் டக் அவுட்டான விராட் கோலி சச்சினை பின்னுக்குத்தள்ளியுள்ளார்.

அதாவது, அனைத்து வகையான கிரிக்கெட்டிலும், அதிக டக் அவுட் ஆன இந்திய வீரர் பட்டியலில் முன்னாள் வீரர் சச்சின் டென்டுல்கரை பின்னுக்குத் தள்ளி கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

விராட் கோலிவியின் முதல் கோல்டன் டக் அவுட் இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்