சென்னை - பெங்களூர் டபுள் டக்கர் ரயிலில் 2ஆம் வகுப்பு இருக்கை வசதி: தென்னக ரயில்வே..!

Siva

செவ்வாய், 9 ஜனவரி 2024 (07:51 IST)
சென்னை பெங்களூரு இடையே இயக்கப்படும் டபுள் டக்கர் ரயிலில் விரைவில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

சென்னை பெங்களூர் டபுள் டக்கர் ரயிலில் 5 பெட்டிகள் புதியதாக இணைக்கப்பட இருப்பதாகவும் இதற்கு கட்டணம் வெறும் 150 ரூபாய் மட்டுமே என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 15ஆம் தேதி முதல் இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள் இணைக்கப்பட இருப்பதாகவும் ஏசி வசதி கொண்ட இரண்டடுக்கு  ரயில் பெட்டிகளின் எண்ணிக்கைக்கு பதிலாக இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ: இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அதிவிரைவு ரயிலான இந்த டபுள் டக்கர் ரயிலில் ஐந்தே முக்கால் மணி நேரத்தில் சென்னையில் இருந்து பெங்களூர் சென்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  

அதேபோல் கோவை பெங்களூர் இடையே இயக்கப்படும் உதய் ரயிலிலும்  ஏழு ஏசி இரண்டடுக்கு ரயில் இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் எட்டாக உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்