நான் இன்னும் அதிக வாய்ப்புகளுக்குத் தகுதியானவன்… கருண் நாயர் ஆதங்கம்!

vinoth

செவ்வாய், 28 அக்டோபர் 2025 (08:00 IST)
இந்தியக் கிரிக்கெட் அணியில் சேவாக்குக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த ஒரே வீரர் என்றால் அது கருண் நாயர்தான். சேவாக் போல தொடக்க ஆட்டக்காரராக இறங்கி விளையாடாமல் ஐந்தாவது வீரராக இறங்கி அவர் அந்த சாதனையைப் படைத்தார். அதனால் இந்திய அணியில் ஒரு நிரந்தர பேட்ஸ்மேனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வார் என்று எதிர்பார்த்த நிலையில் ஃபார்ம் அவுட் காரணமாக வாய்ப்புகளை இழந்தார்.

அதன் பின்னர் 9 ஆண்டுகளாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இதையடுத்து உள்ளூர் போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ‘டெண்டுல்கர்- ஆண்டர்சன்’ தொடரில் அவருக்கான வாய்ப்புக் கிடைத்தது.

ஆனால் அந்த தொடரில் அவர் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார். இதன் காரணமாக அடுத்தடுத்தத் தொடர்களில் அவர் அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் தான் தேர்வு செய்யப்படாதது குறித்துப் பேசியுள்ள கருண் “தொடர்ந்து 2 ஆண்டுகள் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய எனக்கு ஒரே ஒரு தொடரில் மட்டும் வாய்ப்பளித்தது ஏமாற்றமளிக்கிறது. நான் இன்னும் அதிக வாய்ப்புகளுக்குத் தகுதியானவன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்