ஐசியுவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்ப்ட்ட ஸ்ரேயாஸ் ஐயர்… வெளியானப் புகைப்படம்!

vinoth

செவ்வாய், 28 அக்டோபர் 2025 (11:08 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடியபோது காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நெஞ்செலும்பு பகுதியில் அடிபட்டு அதற்கடியில் இருந்த மண்ணீரலில் அடிபட்டி ரத்தக் கசிவு ஏற்பட்டது.

இரத்தக்கசிவு தொடர்ந்து வருவதால் அவசரமாக ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் விரைவில் நலம் பெற பிரார்த்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் உடல் நலம்பெற்று வருகிறார். இதன் முதல் கட்டமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து அவரின் ஃபோட்டோ இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்