ஆஸி முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க்கு தோல் புற்றுநோயா? சிகிச்சைக்குப் பின் பதிவு!

vinoth

புதன், 27 ஆகஸ்ட் 2025 (10:31 IST)
ஆஸ்திரேலிய அணிக்கு ரிக்கி பாண்டிங்குக்குப் பிறகு கேப்டன் பொறுப்பேற்று செயல்பட்டவர் மைக்கேல் கிளார்க். அவர் தலைமையில் 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி 2015 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலகக் கோப்பையை வென்றது. அதோடு அவர் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார்.

அதன் பிறகு வர்ணனையாளராகப் பணியாற்றி வந்த கிளார்க், தற்போது தோல் புற்றுநோய்க்கான சிகிச்சை மேற்கொண்டு அது குறித்துப் பதிவிட்டுள்ளார். அதில் “தோல் புற்றுநோய் என்பது ஆஸ்திரேலியாவில் அதிகளவில் உள்ளது. எனது மூக்கில் இருந்து புற்றுநோய் பாதித்த செல்கள் அகற்றப்பட்டன.  உங்கள் தோல்களை அடிக்கடி பரிசோதியுங்கள்.

வருமுன் காப்பதே சிறந்தது. சீரான பரிசோதனையும் முன்பே கண்டுபிடிப்பதும்தான் சிகிச்சைக்கு சிறந்த வழி. நான் மிக சீக்கிரமாகக் கண்டுபிடித்துவிட்டேன். எனது மருத்துவர்களுக்கு நன்றி.” எனப் பதிவிட்டுள்ளார். கிளார்க்கின் மூக்கில் பாதிக்கப்பட்ட புற்றுநோய் செல்கள் இரண்டாவது முறை அகற்றப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்