தோனி, ரோஹித் சர்மாவை விட சுப்மன் கில் சிறந்தவர்: சேவாக் மகன் ஆர்யாவீர் சர்ச்சை கருத்து..!

Siva

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (09:27 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாகின் மகன் ஆர்யாவீர் சேவாக், தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்களில் தோனி மற்றும் ரோகித் ஷர்மாவை விட சுப்மன் கில் சிறந்தவர் என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லி பிரீமியர் லீக் 2025-இல், மத்திய டெல்லி கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் 17 வயதுடைய ஆர்யாவீர், ஏலத்தில் ரூ. 8 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் சுப்மன் கில்லை, தோனி, ரோஹித் சர்மாவை விட பெருமையாக பேசியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
முன்னதாக, வீரேந்தர் சேவாக், வரவிருக்கும் ஆசியக் கோப்பை போட்டியை, சூர்யகுமார் யாதவின்  தலைமையின் கீழ், இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று கருத்து தெரிவித்தார். 
 
இந்த இந்திய அணியில் இளைஞர்கள் மற்றும் அனுபவமிக்க வீரர்களின் சரியான கலவை உள்ளது, சூர்யாவின் தலைமையின் கீழ், அவர்கள் மீண்டும் ஆசியாவில் ஆதிக்கம் செலுத்த முடியும்" என்று சேவாக் கூறினார். 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்