கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதல் நடத்தியது. இதில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு எதிர்தாக்குதலாக ் இந்திய முப்படை பாகிஸ்தானின் 9 இடங்களில் குறிவைத்துத் தாக்கியது. இதற்குப் பதில் தாக்குதலாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதிகளை தாக்கியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவான நிலையில் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.