ஐந்தாவது டெஸ்ட் போட்டி… இங்கிலாந்து அதிரடி மாற்றங்கள்… பென் ஸ்டோக்ஸ் விலகல்!

vinoth

வியாழன், 31 ஜூலை 2025 (07:47 IST)
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்து வரும் ‘ஆண்டர்சன் –டெண்டுல்கர்’ தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.  இதுவரை நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் தொடர் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியின் ஆதிக்கத்தில் உள்ளது.

இதையடுத்து இன்று ஐந்தாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ளது. ஓவல் மைதானம் இந்திய அணிக்கு மிகவும் துரதிர்ஷ்டமான மைதானமாகவே இதுவரை அமைந்துள்ளது. இந்திய அணி இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளை இந்த மைதானத்தில் விளையாடியுள்ளது. அதில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இதற்கிடையில் இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களில் நான்கு பேர் இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளனர். கேப்டன் பென் ஸ்டோக்ஸ், லியாம் டாவ்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ப்ரைட்ன் கார்ஸல் ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதில் ஜேக்கப் பீத்தெல், கஸ் அட்கிஸ்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டங் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். ஆய்லி போப் அணியை வழிநடத்தவுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்