ரஷ்யா, ஜப்பானை தாக்கிய சுனாமி இந்தியாவையும் தாக்குமா? சுனாமி ஆய்வு மையம் தகவல்..!

Mahendran

புதன், 30 ஜூலை 2025 (11:17 IST)
ரஷ்யாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி அலைகள் உருவாகி, ஜப்பான் வரை சென்றதாக கூறப்பட்டது. இது உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த சுனாமி இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையுமா என்பது குறித்த தகவலை இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ளது.
 
ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பசிபிக் கடற்கரை பகுதியில் உள்ள மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும், இந்தியாவுக்கும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று இந்திய சுனாமி மையம் தெரிவித்துள்ளது. எனவே இந்திய பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
 
ரஷ்யா மற்றும் ஜப்பான் நாடுகளில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டதால், இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு நல்ல செய்தியாகும்.
 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்