இந்திய அணிக்கு பயிற்சியாளராகும் தகுதி கம்பீருக்கு…? கும்ப்ளே கருத்து!

vinoth
ஞாயிறு, 16 ஜூன் 2024 (06:40 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ள கம்பீர், “இந்திய அணிக்கு பயிற்சி அளிப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன். அதை விட பெரியது வேறு எதுவுமே இல்லை என நினைக்கிறேன். நான் பயிற்சியாளராக ஆனால் 140 கோடி இந்திய மக்களின் பிரதிநிதியாக இருப்பேன். ” எனப் பேசியுள்ளார். இதன் மூலம் அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே இந்திய அணிக்குப் பயிற்சியாளராக செயல்பட கம்பீர் தகுதியானவர் எனக் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “கம்பீர் ஒரு அணியை எப்படி வழிநடத்துவார் என்பது நமக்கு தெரியும். அவர் ஐபிஎல் அணிகளை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார். ஆனால் இந்திய அணிக்குப் பயிற்சியாளராக செயல்படுவது என்பது கொஞ்சம் வித்தியாசமானது. ஏனென்றால் தற்போதுள்ள இந்திய அணியை மட்டும் கருத்தில் கொள்ளாமல் எதிர்கால அணியையும் கருத்தில் கொள்ளவேண்டும். அதற்கு கம்பீருக்கு உரிய அவகாசம் கொடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்