ரோஹித்தோடு 15 ஆண்டுகள் விளையாடுகிறேன்… அவரை இப்படிப் பார்த்ததில்லை- கோலி பகிர்ந்த தருணம்!

vinoth

வெள்ளி, 5 ஜூலை 2024 (14:48 IST)
நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது. இதனால் 140 கோடி இந்திய மக்களும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இதையடுத்து பார்படாஸில் புயல் வீசியதன் காரணமாக இந்திய அணி தாய்நாடு வந்து வெற்றிக் களிப்பில் ஈடுபடுவதற்கு தாமதமாகியது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த  வீரர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய இந்திய அணியின் மூத்த வீரர் கோலி உலகக் கோப்பையை வென்ற உணர்ச்சிப்பூர்வமான தருணம் குறித்து பேசியுள்ளார். அதில் “நான் 15 ஆண்டுகளாக ரோஹித் ஷர்மாவோடு விளையாடி வருகிறேன். அவர் அதிகமாக உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார். ஆனால் உலகக் கோப்பையை வென்ற பிறகு அவரும் அழுதார். நானும அழுதேன். அது ஒரு மறக்க முடியாத தருணம்” எனக் கூறியுள்ளார்.

உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்