என் மகன் முன்னால் என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை… பும்ரா உருக்கம்!

vinoth

வெள்ளி, 5 ஜூலை 2024 (14:27 IST)
நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது. இதனால் 140 கோடி இந்திய மக்களும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இதையடுத்து பார்படாஸில் புயல் வீசியதன் காரணமாக இந்திய அணி தாய்நாடு வந்து வெற்றிக் களிப்பில் ஈடுபடுவதற்கு தாமதமாகியது.

இந்நிலையில் நேற்று இந்திய அணியினர் இந்தியா திரும்பினர். அப்போது அவர்களுக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது ஒவ்வொரு வீரர்களும் தங்கள் கருத்துகளையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர்.

உலகக் கோப்பை தொடரின் ஆட்டநாயகனான பும்ரா பேசும்போது “வழக்கமாக நான் போட்டிகளை வெல்லும்போது அழமாட்டேன். ஆனால் என் மகனுக்கு முன்னால் உலகக் கோப்பையை வென்றது மிகுந்த உணர்ச்சிப் பூர்வமான தருணமாக அமைந்தது. அதனால் என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  இரண்டு மூன்றுமுறை அழுதுவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்