இந்நிலையில் ஆசியக்கோப்பை தொடரில் கோலி மீண்டும் தன்னுடைய பழைய பார்முக்கு திரும்புவார் என்ற பெரும் நம்பிக்கை உள்ளது. இந்நிலையில் நேற்று வலைப் பயிற்சியில் ஈடுபட்ட கோலி, சஹால் பந்துகளில் க்ளென் மேக்ஸ்வெல் போல ஸ்விட்ச் ஹிட் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை ஆடினார். மரபான ஷாட்களை விளையாடும் கோலி, இந்த ஷாட்களை விளையாடியுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.