சர்ச்சையைக் கிளப்பிய கோலியின் விக்கெட்… விமர்சிக்கப்படும் நடுவரின் முடிவு!

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (14:55 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இரண்டாவது கிரிக்கெட் போட்டி டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 263 ஆண்களுக்கு ஆட்டம் இழந்த நிலையில் தற்போது இந்திய அணி தனது முதல் இன்னிசை விளையாடி வருகிறது. 

சற்றுமுன் இந்திய அணி தற்போது 7 விக்கெட்களை இழந்து 197 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர் கோலி 44 ரன்களில் எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழந்தார். தனது அவுட்டை எதிர்த்து அவர் டிஆர் எஸ் முறையில் அப்பீல் செய்தார்.

அப்போது பந்து பேட் மற்றும் கால்பேட் ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் பட்டு சென்றது. இதனால் குழப்பமான நடுவர், அனைத்து விதமான கோணங்களில் பார்த்தபோதும் இரண்டிலும் சம நேரத்தில்தான் பந்து பட்டிருப்பதாக தோன்றியது. அதனால் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்குக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்றாவது நடுவர் விக்கெட் என அறிவித்தார். இது கிரிக்கெட் அணியினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்