சிவகார்த்திகேயன் நடிக்கும் SK 20…. ஃபர்ஸ்ட் லுக் எப்போது? இசையமைப்பாளர் தமன் கொடுத்த அப்டேட்!

புதன், 8 ஜூன் 2022 (15:34 IST)
சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்துக்குப் பிறகு தன்னுடைய 20 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் – தெலுங்கில் உருவாகும் இருமொழிப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க உள்ளார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது.

படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை ஒருவர் நடிக்கிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு லண்டனில் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முதல் லுக் நாளை வெளியாகும் என இசையமைப்பாளர் தமன் தற்போது அறிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்