தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணையை குடித்த குழந்தை! – கேரளாவில் சோகம்!

புதன், 8 ஜூன் 2022 (12:46 IST)
கேரளாவில் கொல்லம் பகுதியில் தண்ணீருக்கு பதிலாக மண்ணெண்ணெய் குடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பையாலக்காவு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை. இவருக்கு திருமணம் ஆகி ஆருஷ் என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. சமீபத்தில் கிருஷ்ணபிள்ளை குடும்பத்தினர் செஞ்சேரியில் உள்ள தனது தம்பியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் மதிய உணவு அருந்திவிட்டு அயர்ந்து தூங்கியுள்ளனர். அப்போது குழந்தை ஆருஷ் தவழ்ந்து சென்று அங்கிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தண்ணீர் என நினைத்து குடித்துவிட்டதாக தெரிகிறது. இதனால் குழந்தை மயங்கி விழுந்துள்ளான்.

உடனடியாக குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்