இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் இம்மாதம் 11 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் 14 மாதங்களுக்குப் பிறகு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ரோஹித் ஷர்மா கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் கே எல் ராகுலுக்கு இடமளிக்கப்படவில்லை. மூவருமே கடைசி கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில்தான் டி 20 போட்டிகளில் விளையாடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார்