இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் கோலோச்சும் நிறுவனங்களில் சீனாவை சேர்ந்த ஷாவ்மி நிறுவனமும் ஒன்று. ரெட்மி, போக்கோ உள்ளிட்ட பெயர்களில் பல ஸ்மார்ட்போன்களை ஷாவ்மி வெளியிட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட MIUI (MI User Interface) முறையில் இயங்கி வருகின்றன.
அடிக்கடி MIUI –ஐ அப்டேட் செய்து வரும் நிலையில் தற்போது MIUI 14 ஷாவ்மி மாடல் ஸ்மார்ட்போன்களில் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அதைவிட மிகவும் இலகுவாகவும், பயன்படுத்த எளிதாகவும் உள்ள HyperOS என்ற புதிய இயங்குதளத்தை தனது ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்துகிறது ஷாவ்மி.