நாங்கள் இந்தியாவிடம் வீழ்ந்தது இந்த இடத்தில்தான்… ஜோஸ் பட்லர் கருத்து!

vinoth

வெள்ளி, 28 ஜூன் 2024 (08:23 IST)
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து வீழத்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று 2022 ஆம் ஆண்டு அடைந்த் தோல்விக்குப் பழிதீர்த்துள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. அதையடுத்து இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே தடுமாறி விக்கெட்களை இழந்தது.இந்திய அணியின் ஸ்பின்னர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்த தோல்விக்குப் பின்னர் பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் “இந்திய அணி மொத்தமாக எங்களை விட சிறப்பாக விளையாடியது. அவர்கள் 20 முதல் 25 ரன்கள் கூடுதலாக சேர்த்துவிட்டனர். இது ஒரு சவாலான ஆடுகளம். இந்த போட்டியில் மழை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமென நாங்கள் நினைக்கவில்லை. அப்படி நடக்கவும் இல்லை. டாஸ் வென்று நாங்கள் பேட் செய்திருந்தாலும் எந்த மாற்றமும் இருந்திருக்காது என நினைக்கிறேன். இந்திய அணியில் சிறந்த ஸ்பின்னர்கள் உள்ளனர்.  நான் மொயின் அலியை பந்துவீச்சில் பயன்படுத்தி இருக்கவேண்டும். அதிக ரன்கள் சேர்த்து சிறந்த பந்துவீச்சைக் கொண்டு எங்களை வீழ்த்தியுள்ளார்கள்” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்