ஜோ ரூட் எடுத்த அதிரடி முடிவு…. ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (13:49 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட் உலகின் சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஆஷஸ் தொடர் இங்கிலாந்து அணிக்கு பெருத்த அடியாக விழுந்துள்ளது. 4-1 என்ற கணக்கில் ஆஸியிடம் வீழ்ந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகவேண்டும் என்றும் கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன.

ஆனால் அப்போது அதுகுறித்து பேசிய ரூட் ‘அணியை முன்னோக்கி வழிநடத்தி செல்ல சரியான நபர் நான் என நினைக்கிறேன். தோல்வியில் இருந்து வெற்றிப்பாதைக்கு என்னால் அணியை கொண்டு செல்ல முடியும் என நம்புகிறேன். ஆனால் அதை என் கைகளில் இருந்து பிடுங்க நினைத்தால் அப்படியே நடக்கட்டும்’ எனக் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக பென் ஸ்டோக்ஸை டெஸ்ட் அணிக்கு கேப்டனாக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது ரூட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜோ ரூட்டின் இந்த முடிவு அவரின் ரசிகர்களுக்கு பெருத்த  ஏமாற்றமாக அமைந்துள்ளது. இதையடுத்து டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனாக யாரை நியமிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்