இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் ஏன் ரோஹித் ஷர்மா இல்லை? குழப்பத்தில் ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (08:59 IST)
இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்திய இளம் அணி ஐயர்லாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடும் நேரத்தில் மற்றொரு அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அதற்கான அணி நேற்று இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. இது சமம்ந்தமாக அணி வீரர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியானது.

ஆனால் அதில் கேப்டன் ரோஹித் ஷர்மா மட்டும் இடம்பெறவில்லை. இதனால் அவர் இங்கிலாந்துக்கு சென்றாரா இல்லையா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்