கடலில் மூழ்கிய நகரம்; 650 ஆண்டுகள் கழித்து கண்டுபிடிப்பு! – இங்கிலாந்தில் ஆச்சர்யம்!

திங்கள், 13 ஜூன் 2022 (10:47 IST)
இங்கிலாந்தில் சுமார் 650 ஆண்டுகள் முன்னர் கடலில் மூழ்கிய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக வரலாற்றில் ஒவ்வொரு கண்ட பகுதியிலும் கடலுக்குள் மூழ்கி போன நகரங்களின் கதைகள் பல உள்ளன. அவற்றில் பல கதைகளாக மட்டுமே உள்ள நிலையில் ஆய்வாளர்கள் அவ்வபோது அதுகுறித்த கடல் ஆய்வுகளை மேற்கொண்டு அப்படியான நகரம் இருந்தததற்கான ஆதாரங்களையும் நிறுவி வருகின்றனர்.

அப்படியாக இங்கிலாந்தில் கடலில் மூழ்கிய நகரமாக இருப்பதுதான் ராவென்சர் ஓட் (Ravenser Odd). கிழக்கு யார்ஷர் நகரத்துக்கு அருகே இருந்த கடற்கரை நகரமான ராவென்சர் ஓட் 1300ம் ஆண்டு வாக்கில் முக்கியமான கடல்வழி வணிக துறைமுகமாக இருந்து வந்துள்ளது. பின்னர் இயற்கை பேரிடரால் இந்த நகரம் கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

கடலில் மூழ்கியதாக கருதப்படும் இந்த நகரத்தை கண்டறிய பல ஆண்டுகளாக இங்கிலாந்து ஆய்வாளர்கள் முயற்சித்து வந்தனர். இந்நிலையில் வெற்றிகரமாக தற்போது அந்த நகரம் மூழ்கிய கடல்பகுதியை கண்டடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் பண்டைய இங்கிலாந்தை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்